தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள 243 விஞ்ஞானிகள் பணியிடங்கள் குறித்து...

News image

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 9:39 am

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள 243 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய தகவல் மையம் 1976-இல் நிறுவப்பட்டது. இது மின்-அரசு, மின்-ஆளுமைப் பயன்பாடுகளை உருவாக்குவதில் ஒரு முதன்மை நிறுவனமாகவும், நீடித்த வளர்ச்சிக்கான டிஜிட்டல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதாகவும் உருவெடுத்துள்ளது. மத்திய, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அரசு அமைச்சகங்கள் துறைகளில் மின்-அரசு, மின்-ஆளுமைப் பயன்பாடுகளை வழிநடத்துவதில் தேசிய தகவல் மையம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது அரசு சேவைகளில் முன்னேற்றம், பரந்த வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை எளிதாக்குவதோடு, மத்திய, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பரவலாக்கப்பட்ட திட்டமிடலை ஊக்குவித்து, அதன் விளைவாக இந்திய மக்களுக்கு சிறந்த செயல்திறனையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் "தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி" திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய தகவல் மையம் முன்னின்று வழிநடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 243

இது பற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NIC/SCB/2026/1

பணி: Scientist- B

மொத்த காலியிடங்கள்: 243

பிரிவு: Computer Science & IT

காலியிடங்கள்: 168

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அப்ளிகேசன் பிரிவில் எம்.எஸ்சி., எம்சிஏ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Electronics & Communication

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு, கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

பிரிவு : Data Science & Al

காலியிடங்கள்: 50

தகுதி : பொறியியல் துறையில் Networking, Cyber Law, Software System, Networking, Cyber Security போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளுடன் கேட் - 2024, கேட் - 2025, கேட் -2026 ஆகிய ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500

வயதுவரம்பு: 31.3.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளா பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

NIC RECRUITMENT for Scientist-B Post Vacancies to be filled up on direct recruitment basis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.