தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காணுங்கள்'

மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

'உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காணுங்கள்'

Updated On :9 டிசம்பர் 2022, 12:22 pm



புது தில்லி: உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நேரத்தில், அவர்களது கல்வியைத் தொடர தீர்வு காணப்படாவிட்டால், அவர்களது எதிர்காலம் சிக்கலில் விடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், தேவைப்பட்டால், மத்திய அரசு, நிபுணர்கள் அடங்கிய ஆணையம் ஒன்றை அமைத்து, மாணவர்களின் பிரச்னையை தீர்க்க தீர்வு என்ன என்பது குறித்து ஆராயலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சொத்து என கருதப்படும் மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற மத்திய அரசு தங்களது ஆலோசனைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தீர்வு காணும் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்வு காணப்படாவிட்டால், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலமும் வீணாகி, அவர்களது குடும்பத்தினருக்கு துன்பம் ஏற்படும். நிபுணர்கள் ஆலோசித்து தீர்வு காணு உகந்த வழக்காக இது உள்ளது. வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்கவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக, அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்வி மேற்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு தாயகம் திரும்பினா். உக்ரைன்-ரஷிய போா் தொடா்ந்துகொண்டே இருப்பதால், இந்த மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.