2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாஜகவை வலுப்படுத்த கர்நாடகம் முழுவதும் பயணம் செய்வேன்: எடியூரப்பா

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியையும், அதன் மாநிலத் தலைமையையும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

PTI

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியையும், அதன் மாநிலத் தலைமையையும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

எடியூரப்பா வெள்ளியன்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை மற்றும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் விவாதித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பாஜக நாடாளுமன்றக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டது. கர்நாடகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல செய்தியை அனுப்பியுள்ளது. 

பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தனது செயல்பாடுகளைத் தொடருவேன், செப்டம்பர் முதல்வ வாரத்திலிருந்து மாநிலம் முழுவதும் பயணம் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பாஜக மற்றும் மாநிலத் தலைமையின் கரங்களை வலுப்படுத்துவேன் என்றார். 

ஆனால், கர்நாடக முன்னாள் முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சித் தொண்டர்களுடன் உரையாடி, வருங்காலத் தலைவர்களை அடையாளம் காண்பேன் என்றார்.

மற்ற கட்சிகளிலிருந்து வரும் நல்ல தலைவர்கள் தங்கள் கட்சியில் சேரும் எண்ணத்தை பாஜக வரவேற்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.