ஜம்மு-காஷ்மீர் பிரபல வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள 3 மூத்த வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் துணை ஆணையர் விஜய் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில்,
மூத்த வழக்குரைஞர் மியான் க்யூம், வழக்குரைஞர் மன்சூர் தார் மற்றும் வழக்குரைஞர் முசாபர் முஹம்மது ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
பி.எஸ் லால் பஜாரின் எப்ஐஆர் எண் 62/2020ன் படி வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்பாக, இந்த வழக்குரைஞர்களின் வீட்டில் ஸ்ரீநகர் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரபல இளம் வழக்குரைஞர் பாபர் காத்ரி ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2020 செப்டம்பர் 24 அன்று, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
40 வயது இளம் வழக்குரைஞர் பாபர், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும், செய்தித்தாள்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதி வருபவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

கோவில்பட்டி தொகுதியில் 78.99 சதவீத வாக்குப்பதிவு!

திருச்செந்தூா் தொகுதியில் அமைதியாக நடைபெற்ற வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


