பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குருகிராம் பள்ளியில் 11 வயது சிறுமி மர்ம மரணம்: காரணம்?

குருகிராமில் 11 வயது சிறுமி பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலை

Updated On :22 ஆகஸ்ட் 2022, 11:26 am

குருகிராமில் 11 வயது சிறுமி பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குருகிராமில் செக்டார் 64-ல் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். 

பள்ளியில் நடத்தப்படும் காலை பிரார்த்தனையில் பங்கேற்ற பிறகு, வகுப்பறைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி அந்த இடத்திலேயே சரிந்துள்ளார். 

இதையடுத்து, பள்ளி  ஊழியர்கள் மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மாணவி செக்டார் 65ல் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். தன் மகளின் திடீர் உயிரிழப்பால் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்பே மாணவியின் மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.