தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 190 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே 30 மற்றும் ஜூன் 32, ஜூலையில் 26 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தில்லியில் 189 டெங்கு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13 டெங்கு பாதிப்பு 178 ஆக இருந்தது. ஒரே வாரத்தில் மேலும் 11 பேருக்கு பதிவாகியுள்ளன.
ஆனால், இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
2017ஆம் ஆண்டில், தில்லியில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 20 வரையிலான காலகட்டத்தில் 435 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 20 வரை நகரில் 682 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில், 2020 இல் 51 ஆகவும், 2019 இல் 75 ஆகவும், 2018 இல் 78 ஆகவும் இருந்தது.
தில்லியில் இந்தாண்டு இதுவரை 40 மலேரியா மற்றும் 13 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன
இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும்.
கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.
கடந்த ஆண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது. 2015இல் நகரில் டெங்கு பாதிப்பு 10,600ஐத் தாண்டியது.
1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


