கடப்பா: மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த மென்பொருள் பொறியாளர் 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் பி கொடுரு மண்டல் பகுதியல், 23 வயதாகும் மென்பொருள் பொறியாளர், தனது அறையில் அமர்ந்து திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மடிக்கணினி வெடித்துச் சிதறியதில், அறை முழுவதும் தீப்பரவியது.
பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமலதா, நாள்தோறும் காலை 8 மணிக்கு வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்குவார். மடியில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு நேற்று பணியாற்றிக் கொண்டிருந்த போது அது வெடித்துச் சிதறியது.
அவரது அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது சுமலதா, கருகிய நிலையில் படுக்கையில் மயக்கமடைந்து கிடந்தார். உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சுமலதாவை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அவர் திருப்பதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மடிக்கணினியின் பேட்டரிகள் அதிகம் சூடாவதால், இதுபோன்ற வெடிக்கும் அபாயம் இருப்பதாக, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


