குவகாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது எம்எலஏ கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
ஐக்கிய மக்களின் விடுதலைக் கட்சி எம்எல்ஏவான லேஹோ ராம் போரோ கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியானார். அவருக்கு வயது 63.
அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை குவகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்சரி கரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் புதனன்று உயிரிழந்தார். 68 வயதாகும் மஜேந்திர நர்சரி போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவராக இருந்தார். அவர் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!

கயாது லோஹர் புகைப்படங்கள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


