உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லோதா போலீஸ் வட்டத்தில் உள்ள கர்சுவா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியானவர்கள் வியாழக்கிழமை இரவு உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து மதுபானம் வாங்கி உட்கொண்டனர். இறந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் ஆவார்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தேசியப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபான கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அலிகார் மாவட்ட நீதிபதி சந்திர பூஷன் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


