சித்தார்த்நகர்: சுகாதாரத் துறையின் கவனக்குறைவு காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கிராம மக்கள் சிலருக்கு மே 14-ஆம் தேதி பர்ஹ்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் 20 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் தவணையாக கோவாக்சின் போடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மாற்றி போடப்பட்ட அனைவரும் நலமாக இருப்பதாகவும், யாருக்கும் இதுவரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை, அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


