புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.09 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதேவேளையில் ஒரு வாரத்தில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதமும் 12.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 84,683 குறைந்து 27,20,716 ஆக உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 71.62 சதவீதம் பேர் கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


