பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இந்தியாவில் கரோனாவுக்கு 269 மருத்துவர்கள் பலி 

கொடிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 269 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். 

News image

இந்தியாவில் கரோனாவுக்கு 269 மருத்துவர்கள் பலி 

Updated On :18 மே 2021, 11:46 am

கொடிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 269 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். 

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான அகர்வால், கரோனாவுக்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) காலமானார். 

இந்திய மருத்துவ சங்கத்தின்படி, நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது மொத்தம் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.

ஐ.எம்.ஏ தரவுகளின்படி, 

பிகாரில் நோய்த்தொற்று காரணமாக மொத்தம் 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 37, தில்லியில் 28, ஆந்திரத்தில் 22, தெலங்கானாவில் 19, மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 14 மருத்துவர்கள் தொற்றுநோயுடன் போராடி உயிரை இழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 2,63,000-க்கும் மேற்பட்ட புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 4,22,000-க்கும் அதிகமானோர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். இருப்பினும், ஒரேநாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.