ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹோலி, கும்பமேளா: உத்தரகண்ட் அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உத்தரகண்ட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஹோலி, மாகாகும்பமேள ஆகிய பண்டிகைகளுக்காக அம்மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

News image

உத்தரகண்ட் அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Updated On :25 மார்ச் 2021, 7:44 am

உத்தரகண்ட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஹோலி, மாகாகும்பமேள ஆகிய பண்டிகைகளுக்காக அம்மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 30 வரை பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்டார்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 

அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கரோனா விதிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடைப்பிடிக்கத் தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றார். 

தற்போது, ​​மாநிலத்தில் 1,112 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை 96,062 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக 1,706 பேர் இறந்துள்ளனர். 

மேலும், ஏப்ரல் 1 முதல் 30 வரை ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. கரோனா தொற்று காரணமாக இந்தாண்டு கும்பத்தை 30 நாள்கள் மட்டும் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும், கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.