நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.31க்கும், மும்பையில் ரூ.101.52க்கும் விற்பனையாகிறது.
டீசல் விலை தில்லியில் ஒரு லிட்டர் ரூ.86.22க்கும், மும்பையில் ரூ.93.58க்கும் விற்பனையாகிறது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 20 காசுகளும் ஞாயிற்றுக்கிழமை உயா்த்தி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
இதன் காரணமாக, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.
மேலும், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.71-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.90.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 4 முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலையை 21 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இந்தக் காலத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.5 அளவுக்கும், ஒரு லிட்டா் டீசல் விலை 6 ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


