தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரோனாவுக்கு ஏர் இந்தியாவின் 56 ஊழியர்கள் பலி

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்கள் 56 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கரோனாவுக்கு ஏர் இந்தியாவின் 56 ஊழியர்கள் பலி
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

IANS

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்கள் 56 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், மக்களவையின் நான்காம் நாள் கூட்டமான இன்று கேள்வி நேரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பதிலளித்தார்.

“ஏர் இந்தியா ஊழியர்கள் இதுவரை 3,523 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிரந்தர பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், தற்காலிக பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 90 ஆயிரம் அல்லது இரு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா விமான ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 17 நாள்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.