புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுக்கையில் இரண்டு மடங்காகக் கூட அதிகரித்துள்ளது.
உணவு பொருள்கள் முதல் கட்டுமானப் பொருள்கள் வரை, விலை உயர்வ சந்திக்காத பொருள்களே இல்லை என்று கூறலாம்.
அந்த வகையில் தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக, விற்பனையில் மந்தம், உற்பத்தியில் தொய்வு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது செலுத்த தயாராகி வருகின்றன.
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, தனது ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி வகை கார்களின் விலையை ரூ.15 ஆயிரம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஸிவிஃப்ட், சிஎன்ஜி வகைகளுக்கு ஏற்ப, விலை உயர்வில் மாற்றமிருக்கும் என்றும் இந்திய மாருதி சுசூகியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த விலை உயர்வானது ஜூலை 12ஆம் தேதியான இன்று முதலே அமலுக்கு வருகிறது.
முன்னதாக, ஸ்விஃப்ட் வகை கார்கள் ரூ.5.73 லட்சம் முதல் 8.27 லட்சம் வரை விற்கப்பட்டது. இது தில்லிக்கான விலை. இது நாட்டின் பிற மாநிலங்களுக்கு வேறுபடும். சிஎன்ஜி மாடல்கள் ரூ.4.43 லட்சம் முதல் ரூ.9.36 லட்சம் வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே சில மாடல் கார்களின் விலையை கடந்த ஏப்ரல் மாதம்தான் மாருதி சுசூகி உயர்த்தியிருந்தது நினைவிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


