ஐக்கிய நாடுகள்: புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1-ம் தேதி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் அதாவது 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
உலகளவில் புத்தாண்டு பிறப்பன்று 3,71,500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஃபிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளது. அதாவது இந்தியா (59,995), சீனம் (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ (8,640) ஆகியவையாகும்.
2021-ஆம் ஆண்டு யூனிசெஃப் அமைப்பின் 75வது ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் வித்தியாசமான ஒரு உலகில் நுழைந்துள்ளார்கள், மேலும் இந்த புத்தாண்டு, ஒரு ஆண்டை மறுபரிசீலனை செய்ய புதிய வாய்ப்பைக் கொண்டு வருகிறது என்று யூனிசெஃப்பின் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா ஃபோர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலையில் வேகத்தடை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


