மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:26 am

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெலாரûஸ சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா 6}7 (1/7), 6}3, 6}2 என்ற செட்களில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் 2 மணிநேரம், 20 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இருவரும் மோதியது இது 3}ஆவது முறையாக இருக்க, சபலென்கா 2}ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும் அவர், டபிள்யூடிஏ போட்டிகளில் தொடர்ந்து 17}ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டேவை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 30}ஆம் இடத்திலிருக்கும் பாப்டிஸ்டே 6}1, 6}7 (14/16), 6}3 என்ற செட்களில், 11}ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வென்றார்.

இந்த ஆட்டத்தை 2 மணிநேரம், 40 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த பாப்டிஸ்டே, 1000 புள்ளிகள் கொண்ட போட்டிகளில் 2}ஆவது முறையாக காலிறுதிக்கு வந்துள்ளார்.

போட்டித்தரவரிசையில் 24}ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ் 6}3, 6}2 என்ற நேர் செட்களில், 31}ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஆன் லியை சாய்த்தார்.

ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 4}6, 6}4, 6}4 என்ற கணக்கில், 21}ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜெலினா ஆஸ்டபென்கோவை வெளியேற்றினார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6}4, 6}3 என, ஆர்ஜென்டீனாவின் சொலானா சியராவை வென்றார்.

மெத்வதெவ், ரூட் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் 3}ஆவது சுற்றில், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6}3, 6}2 என்ற செட்களில் நார்வேயின் நிகோலாய் ஜேரை சாய்த்தார்.

நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 12}ஆம் இடத்தில் இருப்பவருமான நார்வேயின் கேஸ்பர் ரூட் 6}3, 6}1 என்ற செட்களில், 20}ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் அலெக்ஸôண்ட்ரோ டேவிடோவிச்சை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் கேஸ்பர் ரூட் } சிட்சிபாûஸ சந்திக்கிறார்.

16}ஆம் இடத்திலிருக்கும் ஆர்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 6}2, 6}3 என, இத்தாலியின் லூசியானோ டார்டெரியையும், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 6}4, 6}2 என, ஸ்பெயினின் டேனியல் அகிலாரையும் வெளியேற்றினர்.

27}ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா 6}7 (4/7), 6}4, 1}6 என்ற செட்களில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரிடம் தோல்வியுற்றார்.

பாம்ப்ரி வெற்றி: ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 7}5, 7}6 (7/1) என்ற செட்களில், ஆஸ்திரியாவின் லூகாஸ் மிட்லர்/அலெக்ஸôண்டர் எர்லர் இணையை வீழ்த்தி, 2}ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.