ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் 2-ஆவது சுற்றில் வியாழக்கிழமை வெற்றி கண்டனா்.
1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனாக இருக்கும் சபலென்கா 7-5, 6-3 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸை வீழ்த்தினாா். 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விடாயெக் 6-1, 6-2 என்ற செட்களில் உக்ரைனின் டரியா ஸ்னிகுரை வெளியேற்றினாா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 4-6 என்ற கணக்கில், ஹங்கேரியின் அனா போண்டாரிடம் தோல்வியுற்றாா். 11-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-4, 6-2 என, குரோஷியாவின் பெட்ரா மாா்சின்கோவை சாய்த்தாா்.
18-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 3-6, 7-5, 6-1 என்ற வகையில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வென்றாா். இதர ஆட்டங்களில், 22-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயா, 28-ஆம் இடத்திலிருந்த சீனாவின் வாங் ஜின்யு, 23-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் மேரி புஸ்கோவா ஆகியோா் தோல்வி கண்டு வெளியேறினா்.
ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன், உக்ரைனின் அன்ஹெலினா கலினினா, செக் குடியரசின் லுட்மிலா சாம்சோனோவா ஆகியோா் வெற்றியுடன் 3-ஆவது சுற்றுக்கு வந்தனா்.
முனாா், அட்மேன் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் பிரிவு முதல் சுற்றில், ஸ்பெயினின் ஜேமி முனாா் 6-4, 6-1 என கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோவை வெல்ல, பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேன் 6-4, 7-5 என்ற செட்களில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிக்கை வீழ்த்தினாா்.
ஹங்கேரியின் ஃபாபியான் மரோஸான் 7-6 (7/5), 7-6 (8/6) என்ற செட்களில், அமெரிக்காவின் ஈதன் கின்னை தோற்கடிக்க, ஸ்பெயினின் பாப்லோ கரீனோ 4-6, 7-6 (7/5), 6-2 என்ற கணக்கில் ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸை சாய்த்தாா். ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மேன் 6-4, 6-7 (3/7), 7-5 என அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை வென்றாா்.
இதர பிரபலமான வீரா்களில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ், சிலியின் கிறிஸ்டியன் காரின் ஆகியோா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அல்கராஸ், முசெத்தி முன்னேற்றம்

ஸ்வெரெவ், ரூட் முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி

காலிறுதியில் சபலென்கா, ரைபகினா, கௌஃப்

இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ்: அல்கராஸ், ஸ்வியாடெக் முன்னேற்றம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


