அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ் 6-7 (6/8), 6-3, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 6-7 (6/8) என்ற கணக்கில் சக அமெரிக்கரான அலெக்ஸ் மிஷெல்செனிடம் தோல்வியுற்றாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 6-0 என மிக எளிதாக, ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை தோற்கடித்தாா். இதர ஆட்டங்களில், நாா்வேயின் கேஸ்பா் ரூட், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் ஆகியோா் வெற்றி பெற, 10-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் தோல்வி கண்டாா்.
ஸ்வியாடெக், ரைபகினா வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என, கிரீஸின் மரியா சக்காரியை சாய்த்தாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-4, 6-4 என்ற செட்களில், உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வெளியேற்ற, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 6-2 என்ற வகையில், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை வென்றாா்.
8-ஆம் இடத்திலிருந்த நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-4, 6-7 (5/7), 3-6 என்ற கணக்கில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவிடம் தோல்வியுற்றாா். இதர ஆட்டங்களில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், பிரிட்டனின் சோனே காா்டெல் ஆகியோரும் வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
தொடர்புடையது
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!

முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்! கோப்பை வெல்வாரா?

காலிறுதிச்சுற்றில் சின்னா், ஸ்வெரெவ்; வெளியேறினாா் பாலினி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


