கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்படக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மாகாராஷ்டித்தின் தாணேவில் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில்,
மாவட்டத்தின் கிராமப்புறங்களில் மட்டுமே கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் 50 சதவீத வருகை மட்டுமே அனுமதிக்கப்படும். கல்வி நிறுவனங்கள் அனைத்து கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தாணேவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி புதிதாக 354 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 2,57,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று காரணமாக 6,202 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


