புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கான குடிமைப்பணிகளை அருணாசல், கோவா, மிஸோரம் உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை இன்று ஒப்புதல் வழங்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கான மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஏற்கனவே மாநிலங்களவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்த மாநிலமானது ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் பிரிவுக்கான குடிமைப்பணிகளை அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் யூனியன் பிரதேச பிரிவுக்கான குடிமைப் பணிகளுடன் இணைப்பதற்காக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா முதலில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், ‘‘நாட்டின் அரசமைப்புச் சட்டம் தற்போது ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் 170-க்கும் மேற்பட்ட சட்டங்கள் தற்போது ஜம்மு-காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு விட்டதால், அதை நிா்வகிப்பதற்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் தேவைப்படுகின்றனா். எனவே, யூனியன் பிரதேசத்தை நிா்வகிக்க வல்ல அதிகாரிகள் நிறைந்த பிரிவுக்கு ஜம்மு-காஷ்மீருக்கான குடிமைப்பணிகள் மாற்றப்படுகிறது. இதன் மூலமாக ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் நிா்வாகத் திறன் மேம்படும்; மக்கள்நலத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்’’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறியது. இன்று மக்களவையிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


