மேற்கு வங்கு மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி கேரளத்தில் தற்போது 64,349 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். நாட்டில் கரோனா பாதிப்பில் முன்னணியில் மகாராஷ்டிரா மாநிலம் இருந்து வருகிறது.
தென் மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,980 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கட்டாயம் செய்துகொள்ளவேண்டும் என்று மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிறுவன செயலாளர் அனூப் குமார் தெரிவித்தார்.
பயணம் செய்யத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சோதனை செய்யப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் தில்லி, கோவா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இதுபோன்ற சோதனைகள் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 3,451 பேருக்குப் புதிதாகத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,52,253 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் காரணமாக மாநிலத்தில் இதுவரை 51,390 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


