தில்லி டிராக்டர் பேரணி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிராக்டர் பேரணியில் உண்மைக்கு புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 26-ஆம் தேதி புது தில்லியில் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில், காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் டிராக்டர் பேரணியின்போது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சார்பில் தேசதுரோக வழக்கு பதிந்துள்ளது.
சர்தேசாய், ம்ரிநல் பாண்டே, விநோத் கே ஜோஷ், அனந்த் நாத், பரேஷ் நாத் உள்ளிட்ட 6 பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவர்களைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிராக்டர் பேரணியின்போது சுட்டுரையின் மூலம் அவர்கள் பதிவிட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகள் காவல்துறையினர் மீதும், ராணுவத்தினர் மீதும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சசி தரூர் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


