நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆப்கன் விவகாரம்: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆக. 26-ல் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கிறார்.

News image
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆக. 26-ல் ஜெய்சங்கர் ஆலோசனை
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

ANI

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்

மேலும், இந்த கூட்டமானது ஆகஸ்ட் 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.