தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி எடுத்துக் கொண்ட புகைப்படம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி, அது தொடா்பான படத்தை சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிா்ந்திருந்தாா்.
சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காணொலியை ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிா்ந்திருந்தாா். இது தொடா்பாக, ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் காணொலிகளை சமந்தப்பட்ட நிறுவனமே இன்று நீக்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோா், அவா்களின் உறவினா்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் விவரங்களைப் பொதுவெளியில் பகிரக் கூடாது என்று போக்ஸோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதியை மீறியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களின் கணக்குகளை சுட்டுரை நிறுவனம் முடக்கியது.
இந்நிலையில், கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட படத்தைப் பயன்படுத்துவதற்கு சிறுமியின் குடும்பத்தினா் வழங்கிய ஒப்புதல் கடிதத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்தாா். அதை ஏற்று அவரது சுட்டுரைக் கணக்கு மீண்டும் செயல்பட அந்நிறுவனம் அனுமதித்தது.
எனினும், படத்தில் உள்ளோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


