ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹரியாணாவில் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. 

News image

ஹரியாணாவில் மே 31 வரை பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அறிவிப்பு

Updated On :21 ஏப்ரல் 2021, 9:05 am

மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றது. 

அதன்படி, ஹரியானாவில் ஏப்ரல் 22 முதல் மே 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று ஹரியாணாவின் கல்வி அமைச்சர் கன்வர் பால் புதன்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறுவது, 

முன்னதாக 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்ததையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளை தயாரிக்கப் பள்ளிகளுக்கு வருகின்றனர். 

மாணவர்களைப் பாதுகாப்பதோடு, ஆசிரியர்களின் பாதுகாப்பதும் முக்கியமானது. எனவே இந்தாண்டு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

ஹரியாணாவில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்.20-ம் தேதி நிலவரப்படி ஒருநாள் பாதிப்பு 7,811 ஆகப் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் 35 பேர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 50,000க்கும் அதிகமாக மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.