பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும்: சண்டீகர் நிர்வாகம்

கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image

கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும்: சண்டீகர் நிர்வாகம்

Updated On :13 ஏப்ரல் 2021, 10:33 am

கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பொதுமுடக்கம் பொருளாதாரத்தை முடக்குகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே பொதுமுடக்கம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகத்தின் ஆலோசகர் மனோஜ் பரிடா கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது, 

நகரத்தில் கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 7 முதல் இரவு 10 மணியிலிருந்து, காலை 5 மணி வரை இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. 

மாநிலத்தில் ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 20 ஆகக் குறைந்தது. ஆனால், தற்போது 350-400 ஆக உயர்ந்துள்ளது. சண்டீகரில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதனால் கரோனா பரவுவதைத் தடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சண்டீகரில் திங்கள் நிலவரப்படி 424 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் 31,167 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.