நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பொதுமுடக்கம் இருக்காது; விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்: கேஜரிவால்

புது தில்லியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது, அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

News image
பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது; கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்: அரவிந்த் கேஜரிவால்
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

DIN


புது தில்லி: புது தில்லியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது, அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புது தில்லியிலும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தலைநகர் தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், ஒரு  வேளை நம்மிடம் தேவையான தடுப்பூசி இருந்து, வயது வரம்பு தளர்த்தப்பட்டால், 2 - 3 மாதங்களில் தில்லியில் தடுப்பூசி போடும் திட்டம் நிறைவு பெறும். தற்போது நம்மிடம் வெறும் 7 - 10 நாள்களுக்கு மட்டுமே போடும் அளவுக்கு தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட வயது வரம்பை நீக்க வேண்டும். கரோனா அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது. புதிய கட்டுப்பாடகள் மட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.