இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
உலகளாவிய கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், முக்கிய மைல்கல்லாக கரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இதுவரை
14,75,410 அமர்வுகளில் 9.80 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 89,88,373 முதல் டோஸும், 54,79,821 பேருக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்களுக்கு 98,67,330 பேருக்கு முதல் டோஸும், 45,59,035 பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,82,55,044 (முதல் டோஸ்) மற்றும் 45 முதல் 60 வயதுடையவர்கள் 5,82,064 (இரண்டாவது டோஸ்) செலுத்தப்பட்டது.
நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60.62 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 84-ம் நாளான (ஏப்ரல் 9) 9,34,15,055 பயனாளிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 46,207 பேருக்கு முதல் டோஸும், 4,09,018 பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதித்து 794 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


