இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஸ்ரீநகரில் பாஜக தலைவர் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலர் பலி

ஸ்ரீநகரில் உள்ள   நௌவ்காம் பகுதியில் உள்ள பாஜக தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image

ஜம்மு-காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On :1 ஏப்ரல் 2021, 8:12 am

ஸ்ரீநகரில் உள்ள   நௌவ்காம் பகுதியில் உள்ள பாஜக தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குப்வாரா மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், பாரமுல்லா மாவட்டத்தில்  கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக இருக்கும் பாஜக தலைவர் அன்வர் அகமது வீட்டை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 

இதையடுத்து, தற்போது பாஜக தலைவர் அன்வர் பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரமீஸ் ராஜா காயமடைந்த நிலையில், நகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நசீர் சௌத்ரி தெரிவித்தார். 

தீவிரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு கட்சியின் காஷ்மீர் பிரிவு கடுமையாக கண்டிக்கிறது என்று பாஜகவின் ஊடக பொறுப்பாளர் மன்சூர் பட் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.