பெங்களூரு: 980 கிராம் எடையுடன் குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, பிறந்த சில நாள்களில் கரோனா உறுதி செய்யப்பட்டு, பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது.
நாட்டிலேயே இதுவரை மிகக் குறைவான உடல் எடையுடன் பிறந்த குழந்தைக்கு கரோனா பாதித்து அதில் இருந்து மீண்டிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குறைமாதத்தில், மிகக் குறைந்த உடல் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, ஆகஸ்ட் 13-ல் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
பிறந்த ஐந்து நாள்களுக்குப் பின் குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக குழந்தை விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் குழந்தை அவதிப்பட்டது. பலகட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
அவ்வப்போது தாய் பால் கொடுக்கவும், குழந்தைக்கு உணர்வுப்பூர்வமான ஆறுதலை அளிக்கவும் அவரது தாய் மட்டும் குழந்தையுடன் சில மணி நேரம் செலவிட அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தைக்கு ரத்தத்தில் குறைவான சர்க்கரைப் பிரச்னையும் இருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு காரணமாக குழந்தை மெல்ல கரோனாவில் இருந்து மீண்டது. கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டதும், உடல் எடைக் குறைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது குழந்தை பூரண நலம் பெற்று 1.2 கிலோ உடல் எடையுடன் வீடு திரும்பியுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவை என்பது பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


