டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

என்.டி.ஏ, ஐ.என்.ஏ நுழைவுத் தேர்வுகளுக்காக 4 சிறப்பு ரயில்கள்

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களுக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
என்.டி.ஏ, ஐ.என்.ஏ நுழைவுத் தேர்வுகளுக்காக 4 சிறப்பு ரயில்கள் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களுக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில்,  கரோனா தொற்று காரணமாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களில் வசதிக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

புணே-ஹைதராபாத் (01155)  சிறப்பு ரயில் புணேவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஹைதராபாத் வந்து சேர உள்ளது. திரும்பும் வழியில், இந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹைதராபாதில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 7 மதியம் 1:15 மணிக்கு புணே வந்து சேரும்.

மற்றொரு சிறப்பு ரயில் மும்பை எல்.டி.டி-ஹைதராபாத் (01157) மும்பை எல்.டி.டி.யில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு ஹைதராபாத் வந்து சேரும். திரும்பும் வழியில், அந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 9:15 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு மும்பை எல்.டி.டி.க்கு வரும் என்று வெளியீடு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.