பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
பாகிஸ்தானில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


பாகிஸ்தானில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண் நகரிலிருந்து கில்கிட் பால்டிஸ்தானில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், கில்கிட் பால்டிஸ்தான் ரவுண்டோ நகரில் பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள பாறைகள் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டது.
பாறை ஒன்றின் மீது பேருந்து மோதியதில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிந்ததது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சடலங்கள் கைப்பற்றப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அகற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...