பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தின் அமைச்சரான கபில் தேவ் காமத் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இன்று பிகார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 69. கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று பாதிக்கப்பட்ட பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதன்பின்னர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவியின் மூலம் சுவாசித்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது.
ஜே.டி.யுவில் சேருவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2015இல் பாபுபரி தொகுதியிலிருந்து ஜே.டி.யு.வில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் கரோனா காரணமாக இறந்த இரண்டாவது அமைச்சர் காமத் ஆவார்.
முன்னதாக, வினோத் சிங், குருகிராமின் மேதாந்தா மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


