கரோனா: இஸ்லாமாபாத்தில் மேலும் 4 கல்வி நிறுவனங்களுக்கு சீல்
இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, மேலும் நான்கு கல்வி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, மேலும் நான்கு கல்வி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அந்நிறுவனங்களை உடனே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் புதிதாக சீல் வைக்கப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைத் தொடர்ந்து இதுவரை 31 கல்வி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாகப் பாதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 73 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 155 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 3,22,122 ஆக உயர்ந்துள்ளது. தொற்று காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 6,621 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...