மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
சேதுபுரா கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகளில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை தற்போது சுமார் 49 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், அதற்கு இணையாக மற்றொரு குழி 45 அடிக்குத் தோண்டப்பட்டு குழந்தைக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் குழந்தைக்காகப் பிரார்த்தனை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 100 அடிக்கு கீழ் தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


