கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்தியாவின் 30 பெருநகரங்களில் நீர் பற்றாக்குறை அபாயம் : ஆய்வுத் தகவல்

இந்தியாவின் பெருநகரங்களான ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

IANS

இந்தியாவின் பெருநகரங்களான ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே உலகின் பல நகரங்கள் பாதித்துள்ள நிலையில், சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின்படி, 2050 ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 100 முக்கிய உலக பெருநகரங்களில் குறைந்தது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.

உலகளவில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளின் மக்கள் தொகையானது 2020ல் 17 சதவீதத்திலிருந்து 2050க்குள் 51 சதவீதமாக உயரக்கூடும்.

இந்திய நகரங்களான ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புணே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 30 நகரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளன என ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.