பிகாரில் நாளை(நவம்பர் 3) இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை (நவம்பர் 3) 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது.
17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக ஈ.வி.எம், வி.வி.பி.ஏ.டி மற்றும் பிற இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நவம்பர் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 4 மணியளவில் முடிவடையும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்கள் உள்பட அனைத்து உபகரணங்களும் துணை ராணுவப் படையின் கண்காணிப்பில் வைக்கப்படும்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத் தலைமையகத்திற்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு, நவம்பர் 10ஆம் தேதி மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மூன்றாம் கட்டத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


