ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு 2020-21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலையில் உள்ள 132 படிப்புகளில் சேருவதற்கு மொத்தம் 2,456 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், உலகளவில் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2020-21 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வு மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு ஏப்ரல் 3 முதல் மே 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் மேலும் புதிய தகவல்களுக்கு பல்லைக்கழக வலைத்தளத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தம் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,043 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


