புது தில்லி: வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் தில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:
தில்லியின் முகர்ஜி நகர் , ரஜோரி கார்டன் பகுதியைச் சேர்ந்த பெண் (வயது 45) ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் பணம் படைத்தவர்களின் வீட்டு இளம்பருவ குழந்தைகளை சேர்த்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன்மூலம் அப்பெண் அவர்களுக்கு ஈ.சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தினை பே டி எம் மூலம் பெற்றுக்கொள்ளும் அவர் பின்னர் பொருளை நேரடியாக வந்து கொடுத்து விடுவார்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சிறுவன் ஒருவனுக்கு போதைப்பொருளை அளிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.
அந்தப் பெண்ணின் கணவர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்துவருவதாகத் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


