ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீரில் 3 நாள்களுக்குப் பிறகு மீண்டும் செல்லிடப்பேசி சேவை

காஷ்மீரில் மூன்று நாள்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி சேவை மீண்டும் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :9 மே 2020, 6:44 am


ஸ்ரீநகர்: காஷ்மீரில் மூன்று நாள்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி சேவை மீண்டும் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். 

கடந்த மே 6 ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் தலைமை தளபதி ரியாஸ் நாயிகூஸ் கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் மொபைல் போன் மற்றும் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகள் மட்டுமே கடந்த மூன்று நாள்களில் இணைய வசதி இல்லாமல் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் செல்லிடப்பேசி சேவை மற்றும் இணையச் சேவைகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது.

மே 6 அன்று நிறுத்தி வைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வசதி மட்டும் இன்னும் சரியாகவில்லை என்று பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகளின் சந்தாதாரர்கள் புகார் கூறியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.