புவனேஸ்வர்: ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தின் குஹுடி அருகே பேருந்துடன் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து பாங்கி செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த 40 தொழிலாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்துடன், காய்கனிகளை ஏற்றிவந்த லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் உதவி ஓட்டுநர் கே.ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கேந்திரபாரா, பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து பேருந்தை வாடகைக்கு எடுத்து வந்திருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் ஒடியா குடியேறியவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் சம்பந்தப்பட்ட நான்காவது விபத்து இதுவாகும்.
முன்னதாக மே 2ம் தேதி, சூரத்திலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து காந்தமால்-கஞ்சம் எல்லையில் உள்ள கலிங்க காட் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
மே 3 ம் தேதி, சூரத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கலிங்க காட்டில் விபத்தை சந்தித்ததில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


