கரோனா பாதித்த துணை ராணுவத்தைச் சேர்ந்த 58 பேர் மருத்துவமனையில் அனுமதி
நொய்டாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லையில் பல்வேறு துணை ராணுவத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கரோனா


புது தில்லி: நொய்டாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லையில் பல்வேறு துணை ராணுவத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) தலைமை இயக்குநர் எஸ்.எஸ் தேஸ்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நொய்டாவில் ரெஃபரல் மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்கும் வகையில் 200 படுக்கை வசதிகள் கொண்ட பிரத்யேக மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுத படைகளின் வீரர்களிடம் இருந்து கரோனா பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஐடிபிபி, பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 58 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு மருத்துவர்களின் குழுக்கள் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்துவருவதாக அவர் கூறியுள்ளார். பாதிப்பு ஏற்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்ளும் மற்ற அனைத்து வீரர்களையும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை, அதிகபட்சமாக 150 சிஆர்பிஎஃப் வீரர்கள் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...