புது தில்லி: வருமான வரித்துறை திரும்ப செலுத்தப்படுவதாக வரும் இணையதள லிங்குகளை அழுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.
ஊரடங்கு போன்ற மிக மோசமான காலக்கட்டத்தில் பொது மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, வருமான வரித்துறையினர், வரிப் பிடித்தத் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி கடந்த சில நாட்களாக இணையத்தில் லிங்குகள் பகிரப்பட்டு வருகிறது.
அதன் மூலம் தனி நபரின் தகவல்கள் திருடப்படலாம் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வரித்துறை தெரிவித்திருப்பதாவது,
வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு..
ரி-ஃபண்ட் அளிக்கப்படும் என்று கூறி வரும் எந்த லிங்கையும் தொடர வேண்டாம். இந்த தகவல்கள் அனைத்தும் பொய், அதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பவில்லை, ஜிஎஸ்டி தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் gst.gov.in இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. வருமான வரித் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி மின்னஞ்சலோ அல்லது தனிநபர் தகவல்களைக் கேட்டு மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


