லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீம்கான் பகுதியில் உள்ள முத்தியா கிராமத்தில் வசித்து வந்தவர் சரோஜினி தேவி (34), அவரது கணவர் மூல்சந்த். குடும்ப தகராறு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்துள்ளனர். சரோஜினி. இதனிடையே கிராமத் தலைவரின் ஆலோசனையின் படி மீண்டும் புதன்கிழமை கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்பதியரிடையே மீண்டும் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. சரோஜினி தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறியுள்ளார். மூல்சந்த் அதை அவமானமாகக் கருதி சரோஜினியை அடித்து, அவளின் மூக்கை கடித்து மென்று துப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீம்கான் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நீம்கான் காவல் நிலைய அதிகாரி கூறுகையில்,
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஜபிசி பிரிவு 326 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணை காயப்படுத்திய குற்றத்திற்காக அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


