ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: தில்லி அமைச்சரவை ஒப்புதல் 

வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கத் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

News image
Updated On :4 மே 2020, 9:39 am

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கத் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சமீபத்தில் நடந்த தில்லி கலவரத்தில் உயிரிழந்த ஐ.பி அதிகாரி அங்கித் சர்மா சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படுவதாக தில்லி அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த முடிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கரோனா வைரஸின் நெருக்கடி காரணமாக நிதியுதவி அளிக்கும் செயல்முறை தாமதமானது. மேலும், ஒரு வாரத்தில் அவரது குடும்பத்துக்குப் பணம் கிடைத்துவிடும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

ஐ.பி அதிகாரியின் உடல் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தில்லியின் சந்த் பாக் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.