புது தில்லி: சரியான திசையில் முதல்படி என்று கரோனா பாதிப்பிற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்படும் பல்வேறு தரப்பினருக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு உதவிகள் அடங்கிய நிதிதொகுப்புகளை வியாழன் மதியம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சரியான திசையில் முதல்படி என்று கரோனா பாதிப்பிற்கான மதிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிதி உதவித் தொகுப்பு குறித்த இன்றைய அரசாங்க அறிவிப்பு சரியான திசையில் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்: சாய் அபயங்கர்

உக்ரைன் போர்: ரஷிய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!

சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று! அலறியடித்து ஓடிய விளையாட்டு வீரர்கள்!

போர் நிறுத்தம்! அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


