கொல்கத்தா: கரோனா பரவல் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
இதுதொடர்பாக புதனன்று அரசுத் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுத் தேவைக்காக உதவும் பொருட்டு, சவ்ரவ் கங்குலி மற்றும் லால் பாபா அரிசி ஆலை தரப்பினர் இருவரும் இணைந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க சம்மதித்துள்ளார்கள் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சி அளிக்கிறது.
கங்குலியின் இந்த செய்கை மற்றவர்களையும் இதேபோல உதவிகளை செய்யத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்: சாய் அபயங்கர்

உக்ரைன் போர்: ரஷிய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!

சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று! அலறியடித்து ஓடிய விளையாட்டு வீரர்கள்!

போர் நிறுத்தம்! அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


