புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி ஷஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகிவற்றுக்கு எதிராக, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வடகிழக்கு தில்லி பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து, ஷஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாங்கள் அது தொடர்பான செயல்களில் இறங்குவோம் என்று ஹிந்து சேனா என்ற அமைப்பினர் திடீரென்று சனிக்கிழமையன்று அறிவித்தனர். ஆனால் பின்னர் தில்லி சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த தில்லி காவல்துறை இணை ஆணையர் ஸ்ரீவத்சவா, 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக் கூடாது என்று நாங்கள் பணிபுரிகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


